தாயகம் தேடிய தீயின் பறப்பு

தாயகம் தேடிய தீயின் பறப்பு

புழுங்கிய மனங்களை பூவாகி வருடியவன்
பொறி ஒன்றைப் பிழம்பாக்கி பூகம்பம் காட்டியவன்-எமை
அழிக்க நினைத்தோர் அஞ்சிட ஓட்டியவன்
அண்ணன் பிரபாகரன் எங்கள் வழிகாட்டி அவன்

எடு ஒரு முடிவதை
கொடு தலை விடிவிற்காய் செய் அன்றேல் செத்துமடி -நல்ல
செயல்களால் பேசு -அட
இதுவன்றேல் உயிரெதற்கு
இனமன்றி ஏதுனக்கு
தலைவன் அவனே எடுத்தானேஅக்கினி-அதை
எங்கள் நெஞ்சிடை வைத்தானே கவனமாய்
எரிகொண்டு எழுந்தோம் விரிக்கிறோம் தீச்சிறகை -இனி
வானெல்லாம் எரியும்
வையகம் பதறும்
பெரும்பிழை செய்தோமே எனப்பிதற்றும் -தமிழரைத்
தொட்டதால் தாமழிகிறோம் என்றுகுழறும்

அழிவைத்தந்தவனுக்கு அதையே பரிசளிப்போம்
அறிவின்வழிநின்று அகிலத்தை ஆட்டிவைப்போம்
இறைமையுடன்கூடிய எங்கள் நீதியை
எரியாடி வென்றெடுத்தே ஆவோம்

அசையுது அக்கினிச்சிறகுகள்
திசைகளே திறந்திடுங்கள்
விசையிது மின்னல்ப்பொறிகள்
விழிகளே நெருப்பெடுங்கள்

வல்லமைத் தழலாயானோம்
வானமே வலிமைகூட்டு
எரிமலை வீறு கொண்டோம்
வீரமே எம்மில் ஊறு
பூதங்கள் ஐந்தின் மேலே
வேதத்தின் சபதம்கொண்டோம்
செய்வதையே சொல்லப்போறோம்
தமிழீழம் வெல்லப்போறோம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வெல்வது உறுதி!

அக்கினி பறவை – அடுத்த தலைமுறை
Phoenix- The Next Generation

Schreiben Sie einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.